நல் எண்ணங்கள் விதைத்து நாளாயிற்று
புது எண்ணங்கள் விதைத்திட வேண்டும்
புத்துணர்வுகள் பிறந்திடல் வேண்டும்
நல்லவைகள் நடந்திட வேண்டும்
பாரெங்கும் பசுமை பரவிட வேண்டும்
மனிதநேயம் மலர்ந்திட வேண்டும்
ஆனந்த அருவி பெருகிட வேண்டும்
அரசியல் முடிச்சுகள் அவிழ்ந்திட வேண்டும்
மனதின் மணமறிய முயன்றிட வேண்டும்
தமிழர் மரபறிந்து செயல்பட வேண்டும்
உறுதியான உள்ளம்தனை உருவாக்கிட வேண்டும்
உன்மைகளை உலகறிய செய்திடல் வேண்டும்
மாசில்லா தென்றல்தனை வீசிட வேண்டும்
தூசு எனும் துயரம் தொலைந்திட வேண்டும்
வனம் எனும் வளத்தினை வளர்த்திட வேண்டும்
அறியாமை எனும் இருள் அகன்றிட வேண்டும்
இயற்கை வழியே வாழ்வை இயக்கிட வேண்டும்
இனியவைகள் செவியினை சென்றடைய வேண்டும்
நற்சொற்கள் நாவின் வழியே வந்தடைய வேண்டும்
முயற்சிகளை முன்னோக்கி செலுத்திட வேண்டும்
புகழ்ச்சிகளை புறம் தள்ளி முன்னேற வேண்டும்
மகிழ்ச்சிகளை மனமாற ஏற்புதல் வேண்டும்
உள்ளத்தினை கண்டு உறவாடுதல் வேண்டும்
புவியிலுள்ள உயிரனைத்தும் நலம் கானுதல் வேண்டும்
மண்ணின் மகத்துவத்தை மனிதன் அறிந்திட வேண்டும்
சுயசிந்தனைகள் துளிர்த்திட வேண்டும்
கற்றவர்கள் நிரம்பியதோர் அகிலம் வேண்டும்
கற்றதை மற்றவருக்கும் கற்பித்தல் வேண்டும்
தற்சார்பு வாழ்விலே தலை நிமிர வேண்டும்
தமிழும் தமிழனும் தரணி ஆள வேண்டும்
-பிரதாப் மோகன்
No comments:
Post a Comment