தேவைகள் என்னவென்று அரியாமல் தேடுதலால் தம் வாழ்க்கை முறைகளை மாற்றி திண்டாடும் ஒவ்வொருவருக்கும் இந்த கட்டுரை பதில் தரும் என்று நம்புகிறேன்.
உண்மையாக உனக்கு என்ன தேவை என்று ஒருவனிடம் கேட்டால் அவனால் அவனுக்கு என்ன தேவை என்று தீர்மானிக்கும் அதிகாரம் அவனிடம் இல்லை என்பதுதான் இன்றைய நிலை. இதனை விளக்குகிறேன் பொறுங்கள். ஏனென்றால் நம் மனது நம்மால் கட்டுபடுத்தபடுவதில்லை பிறர்க்காக நம் மனதை மாற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர் என்பது மட்டுமல்லாமல் நம் சொந்தக்காரர்கள் முன்னிலையில் நாம் தரம் உயந்தவர் என காண்பிக்க வேண்டும் என்பதற்க்காக நம் தேவைகளை யோசிப்பதை நிறுத்தி மற்றவர் முன்னிலையில் செல்வந்தராக, மதிப்புமிக்கவராக, சொகுவாழ்க்கைகாக நம் சுயசிந்தனைகளை கொன்று வாழ்கிறோம்.
சிறுகதை:
ஒரு ஊரில் இரு நண்பர்கள் இருந்தனர். அதில் ஒருவன் வேலை செய்துவந்தான் ஆனால் மற்றொருவன் வேலையில்லாமல் இருந்தான். வேலை செய்பவன் வெளியூர் சென்று வேலை பார்ப்பதால் அவனது தந்தை தன்னால் இயன்ற அளவு பணத்தை திரட்டி பழைய இரு சக்கர வாகனத்தை வாங்கி தந்தார். அதை கண்ட மற்றொருவன் தனது தந்தையிடமும் எனக்கும் அதுபோல் இரு சக்கர வாகனம் வேண்டும் அதுவும் புதிதாக வேண்டும் என அடம் பிடித்தான். ஆனால் இவனோ எந்த வேலைக்கும் செல்லாதவன் தன் நண்பன் முன்னால் நம் மகன் தரம் உயர்ந்து நிற்க வேண்டும் என நினைத்து அவனது தந்தை வட்டிக்கு கடன் வாங்கி புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி தந்துவிடுகிறார்.
வேலைக்கு செல்லும் நண்பன் அந்த வாகனதிற்கு தேவையான எரிபொருள் செலவை அவனே பார்த்துக்கொள்வான். ஆனால் மற்றொருவனோ அந்த செலவையும் தன் தந்தையிடமே பெற வேண்டும். இப்படி போலியான சொகுசு வாழ்க்கை மோகத்தால் தேவையற்ற பொருட்களை தேவையில்லா நேரத்தில் வாங்கி அதன் கடன் சுமையை சுமந்து தேவையானவற்றை வாங்க முடியாத சூழல் உருவாக நாமே காரணமாக இருக்கிறோம்.
இப்படியாக வாங்கிய வாகனக் கடனையும் செலுத்தி, அவனுக்கு தினமும் எரிபொருள் செலவுக்கும் தன் தந்தை பணம் கொடுத்தால் அதில் அந்த குடும்பம் வளர்ச்சி பெறுமா… தளர்ச்சியுறுமா… யோசித்து பாருங்கள்.
**************************************
பணம் தான் உங்களுக்கு தேவையென்றால் எவ்வளவு பணம் உங்களுக்கு தேவையென்று உங்களால் தீர்மானிக்க முடியுமா?. அப்படி தீர்மானித்தால் அந்த பணத்தை வைத்து உங்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிட முடியுமா?. அப்படி வாங்கிவிட்டாலும் உங்கள் மனம் திருப்தியடையுமா.? இத்தனை கேள்விகளையும் உங்களிடம் நீங்களே கேட்டுப்பாருங்கள். உங்களிடம் இதற்கு பதில் இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். இல்லையெனில் ஒரு தீர்வு என்னால் கொடுக்க முடியும் என நம்புகிறேன்.
முதலில் உங்கள் தேவை என்னவென்று தீர்மானியுங்கள். தேவையிருந்தால் மட்டுமே அந்த பொருளை வாங்க முற்படுங்கள். ஒரு பொருள் அவசியமெனில் அதை வாங்கும் அளவிற்கு (பணம்) பொருளை ஈட்டுங்கள்.
இன்று பல நடுத்தர குடும்பங்கள் கடன் தொல்லையாலும் சொகுசு வாழ்க்கையின் மோகத்தாலும் அழிய தொடங்கியது. தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் பழக்கமும் இங்கிருந்துதான் தொடங்கியது. நீங்கள் எதை சொகுசு என்று நினைக்கிறீர்கள்.
கார், பைக், இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள அடுக்குமாடி வீட்டில் வாழ்வதா.? அதை ஆம் என்றால் உங்களை போன்ற அறியாமையில் மூழ்கிபோனவர் வேறொருவரில்லை என்பேன்.
எப்போது உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்திசெய்யும் அளவிற்கு வாழ்கிறீர்களோ அதுவே சொகுசான வாழ்வு. உங்களுக்கான உணவு உங்களால் உற்பத்தி செய்யபட்டாலே நீங்கள் சொகுசானவர் என்பேன்.
உண்மையில் உங்களுக்கு தேவை மகிழ்ச்சியும், நிம்மதியுமே தவிற பணமல்ல என்பதை உணருங்கள். நீங்கள் பணமில்லாமல் எப்படி வாழ முடியும் என்று கேட்பீர்கள்.முழுமையாக பணமில்லாமல் வாழ முடியும் என்று நான் கூறவில்லை, ஒருவர் பணமில்லாமல் கூட சில காலம் வாழ இயலும் ஆனால் நிம்மதி இல்லாமலும், மன அமைதி இல்லாமலும், மகிழ்ச்சியில்லாமலும் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதை மறுக்க முடியுமா உங்களால்.
இவ்வுலகின் இயற்கையிடம் மகிழ்ச்சியை வேண்டுங்கள், ஆனந்தத்தை வேண்டுங்கள், அமைதியை வேண்டுங்கள். அனைத்தும் இயற்கையின் மூலம் உங்களுக்கு வழங்கப்படும் என்பது ஈர்ப்பு விதி.
உங்கள் மனதிலுள்ள தேவையற்ற எண்ணங்க்களை நீக்குங்கள் என நான் சொல்லப்போவதில்லை. தேவையான எண்ணங்களை கொண்டு உங்கள் மனதை நிரப்புங்கள் தேவையற்ற எண்ணம் தானாக வெளியேறும்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஏதேனும் ஒரு காரணத்தோடு பிறந்தவைதான். அப்படியாக நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தனித்துவம் பெற்றவரே. ஆகையால் நாம் யார் நமக்கு என்ன தேவை என்பதை நாம் தான் நிர்னையிக்க வேண்டும். நாம் அனைவரும் வாழ பிறந்தவர்களே, இயற்கை வாழ்வியலை பின்பற்றி வாழ்ந்த்தால் நம் வாழ்வு சிறப்பு மிகுந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது பல அறிஞர்கள் கூறும் கருத்து.
நம் மனது நம்மால் இயக்கப்பட்டாலே நம் தேவைகள் நிச்சயம் பூர்த்தியாகும். ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நல் எண்ணங்கள் நேர்மறை சக்தியுடையவை. நல் எண்ணங்களை கொண்டு உங்கள் மனதை நிரப்புங்கள்.
நீங்கள் உங்கள் மனதால் தான் இயங்குகிறீர்கள் என்று நம்புங்கள். உண்மையில் உங்களுக்கு தேவை உங்கள் மன ஓட்டத்தை கட்டுப்படுத்தும் திறனே. அதை வளர்ப்பதற்கு முற்படுங்கள். முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் உண்மையான தேவவையை தீர்மானித்து அதற்க்கான தேடுதலை துவக்குங்கள். உங்கள் மகத்துவமான தனித்துவத்தை வெளிப்படுத்தி, உங்கள் மனதை வென்று இவ்வுலகையும் வென்று வாழ்வில் வளம் அனைத்தும் பெற்று வாழ்க!! என ஆனந்தத்தோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்.
இப்படிக்கு
பிரதாப் மோகன்
No comments:
Post a Comment