எழுவாய் என் தோழா
ஏட்டு சுரையாய் இல்லாமல் எழுந்து வா.
சுட்டெறிக்கும் சுடராய் சுழன்று வா.
எத்திசையிலுள்ள இடரை களைய வா.
நற்சிந்தனைகளை சிந்திக்க பழகு.
காண்பதெல்லாம் நன்மையாக்கும் மனதை பழக்கு.
வெற்றறிவு கொண்டோர் சொல்லை கேட்டால் சற்றே விலகு.
சான்றோரிடத்து ஓர் சொல்லை கேட்டால் கேட்டு பழகு.
சுயம் கொண்டு இமயம் தொடு
பயம் கொன்று ஆயுதம் எடு.
தன்னொரு சக்தியை தரணியறிய செய்.
தம்முள் அடைப்பட்ட கைதியை விடுதலை செய்.
விதி என எண்ணி வீழ்ந்திட வேண்டாம்.
வீதிக்கோர் வீரன் தோன்றிட வேண்டும்.
போர் குண்டு எரியும் பீரங்கி ஆயுதமா.
பல கடன் வழங்கும் சிறு வங்கி பேராயுதமா.
காற்றிலாடும் காகிதத்தை கடனாக பெற்றான்.
சேற்றில் உழைக்கும் பாமரன் பதிலாக தன் உயிரை தந்தான்.
உயிருள்ளவரை உழவு பழகு.
உழவனின் உயிர்காக்க போர் தொழிலும் பழகு.
மாறுகொள்ளும் முறையை மனதில் எடுத்து.
பணம் எனும் காலனை புறம் துரத்து.
மனதையும் புத்தியையும் புணர செய்.
அவ்வினைவில் தோன்றும் அறிவை உணர செய்.
உன்னுள்ளே உலகம் உண்டு.
அதை உணரும் போது நீ நிற்பாய் வென்று.
பேராற்றல் கொண்டு பிறந்தவன் நீ.
அவ்வாற்றலை அறிந்தாலே வெல்வாய் நீ.
காதலினால் ஓர் காவியம் செய்.
சொர்பனத்தை சித்திரமாக செய்.
காண விரும்புவதை காணுருவாக்கம் செய்.
கண்ட கனாவை கைகூட செய்.
எல்லை கோடு இல்லை உனக்கு.
உன் எண்ணம் கொண்டு உன்னை செதுக்கு.
-பிரதாப் மோகன்
No comments:
Post a Comment