அவனவள்
முப்பாலிலே உலகை அளந்தான் வள்ளுவன்
மூன்றாவது பால் கொண்டு படைத்தானே இறைவன்
சதை மாற்றம் உருமாற்றம் செய்ததே
வீதியில் நிற்கதியாய் நிற்க வைத்ததே
வெள்ளித்திரையில் கேலிகள் கோடி
வாழ்வின் ஓட்டமோ ஆதரவை தேடி
அனைக்கும் கைகளோ அந்தரங்கத்தை நாடி
தினம் தினம் வெந்து போகிறோம் வாடி
ஒதுங்குமிடம் கூட ஒதுக்கவில்லை எங்களுக்கு
தீர்வு பிறக்குமா இந்த சிக்கலுக்கு
கூட்டிலே பிறந்த குயிலொன்று காகமாய் மாறியதால்
வீட்டிலே வளர்ந்த வெள்ளிமணியை வீதியிலே தூக்கி எரிந்தாய்
சிறகொடிந்த குயில்காகம் இரை தேடி தேகம் துறக்க
தாகம் தீர்த்த குயில்காகம் தன்னை இழக்க
பருந்து பசியோ பறந்தோட கடைசியில் இறந்து போனது அக்குயில்காகம்
திசைமாறி திரியும் பறவைகள் பல
அப்பறவைக்கும் உண்டு குறிக்கோள்கள் சில
எரிந்து போகும் சாம்பல் கூட திருநீறாய் மனக்கும்
சிதைந்து போகும் இப்பாலினமோ திருநங்கையாய் தவிக்கும்
உன் பால்.!! என் பால்!! வேறில்லை
அன்பால் நாம் ஒன்றே.!
-பிரதாப் மோகன்
Inspired By
Inspired By
சதையை மீறி
No comments:
Post a Comment