மின் கழிவுகள்(E-waste)
கேட்பதற்கே புதிதாக உள்ளதா...
வழக்கமாக பிளாஸ்டிக் பைகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என்றுதான் அறிந்துள்ளோம்...!!!
ஆனால்.!!!!!
அதுக்கும் மேல........ என ஒரு அபாயம் நம் அருகே உள்ளது நமக்குத் தெரியாமல்.
அதுக்கும் மேல........ என ஒரு அபாயம் நம் அருகே உள்ளது நமக்குத் தெரியாமல்.
அதுதான் மின்சார கழிவு.
நாம் பயன்படுத்தும் கடிகார பேட்டரி முதல் செயற்கைக்கோள் வரை, அனைத்தும் மின்னனு சாதனங்கள்.!
இவைகள் பயன்படும் வரை மின்னனு சாதனங்கள் பழுதான பிறகே மின்சார கழிவுப்பொருளாக உருவாக்கம் பெறுகிறது.
இதனால் என்ன தீமைகள் வந்துவிடும் என்ற கேள்வி நீங்கள் கேட்பதை என்னால் அறிய முடிகிறது.
சொல்கிறேன் செவி சாயுங்கள்....
இந்த மின்சார கழிவுகளில் முதன்மையானது அச்சிடப்பட்ட மின்னனு அட்டை (PCB- PRINTED CIRCUIT BOARD) இதில் கேட்மியம், காரியம் போன்ற நச்சுக்கள் நிறைந்துள்ளன.
இதை முறையே மறு சுழற்சி செய்ய வேண்டும். ஆனால் நாமோ பழைய இரும்பு கடையில் அற்ப விலைக்கு விற்கும் நிலையில் உள்ளோம்.
இதை எரித்தால் காற்று மாசுபடும்.
இதை புதைத்தால் நிலம் மாசுபடும்.
இதை நீர்நிலைகளில் எறிந்தால் நீர் மாசுபடும்.
இப்படி எல்லா பஞ்ச பூதங்களுக்கும் பூதமாய் விளங்கும் நம் பூமியின் எதிரிதான் இந்த மின் கழிவு.
நம் நாட்டில் தான் இதுபற்றி விழிப்புணர்வு மிகுதியாக இல்லை.
சில ஆண்டுகளாக வெளிநாட்டு கப்பல்கள் மூலமாக நம் நாட்டு கடலில் மின்சார கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.
சில ஆண்டுகளாக வெளிநாட்டு கப்பல்கள் மூலமாக நம் நாட்டு கடலில் மின்சார கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.
"'அவர்கள் கூறியது
எங்கள் நாட்டில் மறுசுழற்சி செய்யும் செலவை காட்டிலும் உஙகள் நாட்டில் வந்து கொட்டுவதற்கு செலவு குறைவுதான்"'
எங்கள் நாட்டில் மறுசுழற்சி செய்யும் செலவை காட்டிலும் உஙகள் நாட்டில் வந்து கொட்டுவதற்கு செலவு குறைவுதான்"'
இதுதான் நம் நாட்டின் நிலை.
அதிக மின் கழிவு உற்பத்தியில் இந்தியா 5வது இடம்.
கடந்த ஆண்டுகளில் 1.7 மில்லியன் டன் கழிவுகள்.
இதை தடுக்க முறையாக மறுசுழற்சி செய்தல்.
பழுதாகும் மின்னனு சாதனங்களை பழுது நீக்கம் செய்து மீண்டும் உபயோகித்தல்.
இதை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்.
உங்கள் கேள்விக்கு விடை கிடைத்ததா..!!
விடை கொடுப்போம் மின்சார கழிவிற்கு...!!
விளைவிப்போம் வளமான பூமியை வருங்கால சந்ததிக்கு..!!
பசுமையுடன்
பிரதாப் மோகன்
பிரதாப் மோகன்


This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete