துப்பு துப்புனு துப்புற எச்சி...
உன்னால துப்பு கெட்டுப்போச்சு நம்ம நாடு மச்சி..
தப்பு தப்புனு சொல்லுறன் மச்சி..
மப்பால தான் உயிர் போகுது மச்சி..
வேணாம் வேணாம் விட்டுடு மச்சி..
நாடே உன்னை நம்பி இருக்குது மச்சி..
ஒட்டுக்காக காச வாங்குற மச்சி...
காசுக்காக நாட்டையே விக்கிற மச்சி...
பொண்டாட்டி தாலியை அடகு வச்சி..
போதை ஆட்டம் தேவையா மச்சி...
நடு ரோட்டுல சிகரெட்ட பத்தவச்சி..
நாட்டையே கொளுத்துற தீய வச்சி...
குப்பைய கூடையில போட்டுக்கனும்..
நல்லதை சொன்னா கேட்டுக்கனும்...
வண்டி ஓட்டயில ஹெல்மட் போட்டுக்கனும்...
விபத்து வந்த பின்னே ஏன்டா யோசிக்கனும்...
சோம்பேறியா தூங்காத மெத்தையில..
சாதிச்சு காமி ஒத்தையில..
முற்போக்குடன்
பிரதாப்
No comments:
Post a Comment