சிறுவனே

இரண்டு நாட்கள் முன்பு உணவு பொருள் தேவை காரணமாக அருகில் உள்ள கடைக்கு சென்று வந்த பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சி என் மனதை மிகவும் வாட்டியது

அங்கு வந்த ஒரு சிறுவன் வாயில் புகையிலையை முழுதும் வைத்துக்கொண்டு "இரண்டு கப் கூலிங்கா.. வாட்டர் பேக்கட்'' என்றான்.
அவன் வயது 12 இருக்கும்.

6ம் வகுப்பு படிக்க வேண்டிய அந்தச் சிறுவன் இந்நிலைக்கு வர யார் காரணம் என என் மணம் யோசிக்க தொடங்கியது. அவன் பெற்றோர்களா...? அவனுக்கு ஒழுங்கான கல்வி கொடுக்க தவறிய பள்ளிக்கூடமா..? அவனது நன்பர்களா..?

சற்று பொறுங்கள் அதற்குள்ளாக முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

இந்த மூன்றும் ஒரு காரணம் தான்....

ஆனால் இதை தவிர ஒன்றுள்ளது.

அதுதான் இன்றைய ஊடகங்கள். சம்பந்தமல்லாமல் சொல்லவில்லை.... காரணம் இருக்கிறது.............

இன்றைய மகிழ்ச்சி கொண்டாட்டங்களை தொலைக்காட்சியிலும் சரி திரைப்படத்திலும் சரி. அதை போதை ஆட்டமாக தான் காண்பிக்கின்றனர்.

சிறுவர்கள் காணும் காட்சிகளை அவர்கள் நிச்சயம் முயற்சிப்பார்கள். 24 மனி நேரமும் ஒளிபரப்பும் விளம்பரங்கள் கூட மேற்கத்திய கலாச்சாரத்தை நம்மையறியாமல் நம் மணதுக்குள் ஊடுறுவி நிலைகொண்டு அவ்வாறு நம்மை நடக்க செய்கின்றக.

இந்த சந்ததியினர் நம் பாரம்பர்ய விளையாட்டுக்களை முயற்சிக்காதவர்கள். ஓரு அறையில் அமர்ந்து சமூக வலைதளமும் கணினி விளையாட்டுக்களும் விளையாடுகின்றனர்.
அந்த விளையாட்டில் கூட வன்முறைகள் கற்பிக்கபடுகின்றது.

5 முதல்  15 வயதுள்ள சிறுவர்களை மேம்படுத்த வேண்டியது நம் சமூகத்தின் கடமையாகும்.

இதை படிக்கும் நன்பர்கள், பெற்றோர்கள், சகோதரர்கள், தங்களுக்கு தெரிந்த தெரியாத சிறுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வழிநடத்துவோம் நல்வழியில். தமிழர்கள் கற்றுக் கொடுத்த கலைகளை பின் வருபவர்களுக்கும் கற்பிபோம்.

-பிரதாப்

Post a Comment

1 Comments