திசை மாறிய விசை பொறிகளோ பலவுண்டு
இசைபடுத்த பல இங்கு வருவதுண்டு
வெண்ணிற கரங்கள் கறையேறி கருநிறமாக
உண்ணும் நேரமதில் தன்கரம் கண்டே மனம் நோக
வெந்து மனம் வாடி வெறும் நீர் அருந்தி பசியாரும்
நொந்து பசி கொல்லும் நேரம் புது வாடிக்கை வந்து சேரும்
மேனியெங்கும் பரவிய புழுதிக்காடு
கேசமெங்கும் திரவிய மசை விழுதோடு
உடை மேல் வீசும் ஓர் துர் வாசம்
மெய் வலியால் சற்றும் திணரும் சுவாசம்
காலம் சென்ற வாகனங்களே இக்கரைக்கு வருவதுண்டு
சிறிய கூலி கொண்டு சலுகைகள் பல பெறுவதுண்டு
நுண் தடைகள் பல தெண்படும்
தன் கரம் கொண்டு அத்தடைகள் உடைபடும்
நெடு நேரம் தீராது சில துயரம்
தம் சேவைக்கென பல தேவைகள் வரும்போதே நம் புகழ் உயரும்
இடைவிடாது உழைக்கும் இந்த பொறியாளன்
எவ்வாகனத்தையும் நெறிபடுத்தும் சிறந்த ஓர் நெறியாளன்.
-பிரதாப் மோகன்
அனைத்து இயந்திர வல்லுனர்களுக்கும் இயந்திர பொறியாளர்களுக்கும் சமர்ப்பணம்.
Dedicated to all Mechanics and Mechanical Engineers
nice da...
ReplyDelete