முன்னேறும் நீ முதுகை பார்க்காதே
முதலடி வைத்தபின் சிரம் தாழ்த்தாதே
ஏளனம் பேசுபவன் ஏணி தருவதில்லை
ஏற நினைப்பவன் எதற்க்கும் அஞ்சுவதில்லை
பொறுத்த மனம் வெறுப்பை என்றும் அடையாதே
சிறுத்தை குணம் சிறுமான் என்றும் அறியாதே
நற் புகழ் அடைய நாள் கடக்குமே
புகழ் அடைந்த பின்னே அந்நாள் மறக்குமே
கரையில்லா கடல் ஏது
தீர்வில்லா துயர் ஏது
கேலிச் சொல்லிற்கு மௌனத்தை தந்துவிடு
இமயமென உயர்ந்து அவர்கள் மௌனத்தை வென்றுவிடு
வாழும் நாள் வரை வாய்ப்புகள் கோடி
வீழும் நாள் வரை வென்றிடு திரைகடல் ஓடி
-பிரதாப் மோகன்
No comments:
Post a Comment