உன்னை நீ அறியும் நேரம்
உடைத்தெறி வெளிவரட்டும் உன் வீரம்
வைத்துக்கொள் நெஞ்சில் கொஞ்சம் ஈரம்
பொறுமைகொள் இன்றைய கரியே நாளைய வைரம்
களவாட முடியாது நீ கற்ற பாடம்
காத்து நிற்கிறது உன் சிரத்திற்கான மகுடம்
விழும்போது அழுபவன் மாந்தராவான்
விழுந்தபோதெல்லாம் எழுபவனே வேந்தராவான்
நிற்கதி எனும் நிலை நிரந்தரமில்லை
நடந்தையே நினைந்தால் வாழ்வில் மாற்றமில்லை
கடந்தவையை காற்றோடுவிட்டு நடப்பதை கரம்பிடி
மனக்கண் கண்ட நிகழ்வை முயற்ச்சியினால் சித்திரம் வடி
புதைந்து எழு புதையலாய் புத்துணர்ச்சியோடு
விதைந்து எழு விருட்சமாய் வீரமலரோடு
அணு பிளந்தால் தான் ஆற்றல் பிறக்கும்
தடை கடந்தால் தான் தரணி போற்றும்
உன் எண்ண ஓட்டம் உன் அருகே ஓடட்டும்
ஊர் உலகம் எங்கும் உன் புகழ் பாடட்டும்
-பிரதாப் மோகன்
No comments:
Post a Comment