அனல் அருகே அசைந்தாடிடும் உடல்
செவிகளில் வந்தடையும் பல குரல்
பம்பரமாய் சுற்றிடும் இவர் கால்கள்
பசியுள்ளோனை ஈர்க்கும் இவர் தாளங்கள்
ஊரார்க்கு ஓடி ஓடி உணவளிப்பார்
தான் உண்ணும் நேரம் அவர் மறப்பார்
செந்தழல் அருகே சிந்து பாடி
வெந்து வியர்வையில் நீராடி
பறந்து விரைந்து பசியாற்றி
வேலையில்லாதவரும் பசியாறும் விலை வைத்து
மீதம் நாளை என தயங்குகையில் சென்று வா என புன்னகைத்து
நட்சத்திர விடுதியிலும் கிடைக்காத மரியாதை
நடமாடும் கடையாயினும் நல்லன்பு அளித்திடுவாய்
அண்ணா என்றவுடனே அன்போடு அன்னமிட்டிடுவாய்
வியாபாரம் தாண்டி உள்ளத்தினால் உறவாடிடுவாய்
சாலையோர நடமாடும் உணவகத்தின் மூலம் பசியாற்றும் அனைத்து அண்ணன் அக்காவிற்கும் இது சமர்ப்பணம்.
-பிரதாப் மோகன்
No comments:
Post a Comment