குறிலாக என் குரல் கரையக் கண்டேன்
நெடிலாக உன் குரல் நிறையக் கண்டேன்
என் எதிரே என் பிம்பம் மறையக் கண்டேன்
அநிலம் வீசும் கணத்தில் மதுரம் சேர
அகத்தில் ஓர் உருவம் காணுருவாக கண்டேன்
அகிலம் மேலே சற்று மிதக்க கண்டேன்
தொடு திரையில் உன் முகம் உதிக்க கண்டேன்
உன் முகத்தாலே அத்திரை நிறைய கண்டேன்
தான் அறியாது என் முகம் மலர கண்டேன்.
நாளாக உன் நினைவு வளர கண்டேன்
வானாக அதனளவு உயர கண்டேன்
சிந்தித்த கவியெல்லாம் சித்திரமாய் நிற்க
நிற்பது நீதானா என அருகே சென்றேன்
அது மாறாக கனவாகி கலைய கண்டேன்
-பிரதாப் மோகன்
No comments:
Post a Comment