
நடைமுறைகளை மாற்ற, வரும் தலைமுறையை மெருகேற்ற.
தடைகளை தகர்த்திடு நண்பா, படை திரட்டும் எதிரியிடமும் பதில் கொடு முதலில் அன்பா.
நகைத்தவரெல்லாம் திகைக்கட்டும் உன் திறம் கண்டு,
பகைத்தவரோ பதுங்கட்டும் உன் வருகை கண்டு.
தோல்விகள் மறைந்து போகும் வென்ற பின்,
வெற்றியும் கரைந்து போகும் உன் முயற்சி நின்ற பின்.
முயற்சியே மூச்சு அனுதினமும் சுவாசி,
வளர்ச்சியே மகிழ்ச்சி செய்வதை முற்றிலும் நேசி.
உள்ளுணர்வை நாளொரு முறையேனும் வாசி.
துணை என்று யாரும் இலர், தனித்து நின்றேயினும் தனித்துவமாய் நில்.
உதித்தவரல்லாம் உலகத்தார் உள்ளத்தில் நிற்பதில்லை,
உழைப்பவரோ ஒரு போதும் சோர்ந்து போவதில்லை.
குருதியோடும் வரை உறுதியோடு இரு,
வெற்றி களிப்பாடினும் விழிப்போடு இரு.
கனவென்று ஒன்றை மனதில் நிலைநிறுத்து,
வெறுப்பதை விடுத்து விரும்பியதை துரத்து.
கப்பலேதும் கவிழ்ந்திடவில்லை கவலை விடுத்து,
முப்பொழுதும் புன்முறுவலோடிரு இப்பொழுது கடந்திடுமென்று, எப்பொழுதும் இரு நீ நீயாக!!!
மற்றவரிடமிருந்து வருவது பாராட்டில்லை, நீங்கள் செய்யும் செயலால் உங்கள் மனம் நிறைவதே பெரும் பாராட்டு அதிலிருந்து வரும் மகிழ்ச்சியே பேரானந்தம். உம் மன நிறைவு கொள்ளும் செயலேதென்று அறிந்து அதை செய்வீராக.-பிரதாப் மோகன்

No comments:
Post a Comment