அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்!!
இந்த பெருந்தொற்று நேரத்தில் அனைவரும் தங்கள் இல்லத்தில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நேற்று (27-05-2021) எனது ஊர் அருகே (வெள்ளமண்டபம் முகாம்) பெருந்தொற்றுக்கான தடுப்பூசி போடுவதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். அதற்கு முன்பே நான் இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். இருப்பினும் அவர் கூறிய உடன் அந்த முகாமிற்கு சென்றேன்.
எனக்கான தடுப்பூசியை நான் போட்டுக்கொண்டேன். அங்கு பெரும்பாலான மக்கள் வேறு ஊரிலிருந்தே வந்திருந்தனர். உள்ளூர் மக்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே காணப்பட்டது. செவிலியர்கள், மற்றும் முகாமிலிருந்த அனைத்து பணியாளர்களும் மிக கவனமாக செயலாற்றினர்.
தடுப்பூசி போட போகுமுன்னே எனது சகோதிரியை அழைத்தேன் இந்த முகாமில் 18 முதல் 44 வயதுகுட்பட்டவர்களுக்கானது என்பதால். ஆனால் அப்பொழுது, நான் வரவில்லை என்றார். போட்ட பின்பு, நானும் போட்டுக் கொள்கிறேன் என்றார்.
மறுபடியும் அந்த முகாமிற்கு சென்றோம், ஆனால் ! அப்பொழுது மதிய உணவு அருந்தும் நேரம் சற்று வெளியே காத்திருக்கவும் என்றனர். என்னை போன்று சிலரும் காத்திருப்பதற்காக வெளியே நின்றோம்.
பொதுவாக மதிய உணவு அருந்தும் அரசு பணியாளர்கள் பற்றி நான் கூற வேண்டியதில்லை. ஆனால் நேற்று வியப்பாக இருந்தது பத்து நிமிடத்திற்குள்ளாகவே அவர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். இந்த தடுப்பூசியின் முக்கியத்துவம் அறிந்ததால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கூட தவிர்த்து நமக்காக பணியாற்றினர். அவர்களுக்கு உள்ள அக்கறையும் கடமை உணர்வும் நம்மில் சிலரிடம் இருப்பதில்லை.
தங்களுடைய விலை மதிப்பற்ற உயிரை கூட பொருட்படுத்தாமல் நமக்காக களப்பணி செய்யும், செவிலியர்கள், மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவரின் குடும்பத்திற்காகவும். நாம் அவசியமற்ற பயணத்தை தவிர்போம், முகக்கவசம் அணிவோம் தடுப்பூசி போட்டுக்கொள்வோம்.
இவர்களின் பணி மதிப்பிற்குரியது, பாராட்டுகுரியது!!
No comments:
Post a Comment