![திருவாரூர் டூ திருவாரூர்: Thiruvarur to Thiruvarur (Tamil Edition) by [இரா. அபர்ணா]](https://www.amazon.in/images/I/51SvZ+PY7xL.jpg)
பயணம் என்றாலே நமக்கு குதூகலம் தான்.
சிறு வயதில் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு
செல்கையில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையான ஒன்று இன்று வரை ஏதுமில்லை. குடும்பத்தோடு
கோடைக்கால சுற்றுலா செல்லும் அனுபவம் ஒவ்வொன்றும் மலரும் நினைவுகளாக நம்மில் பலருக்கு
உண்டு.
இன்றோ நாம் பள்ளிக் கல்லூரி படிப்பையெல்லாம்
முடித்து வேலை என்ற ஒரு வணிக மந்திரத்தால் சுதந்திர பறவையாய் இருந்த நாம் கூண்டுக்
கிளியாய் மாட்டிக் கொண்டோம். அதிலும் சிலருக்கு பணி நிமித்தமாய் வெளியூர் செல்லும்
வாய்ப்பு இருந்தாலும் அந்த பயணம் சுற்றுலாவாக மாறாது.
இப்படி மாறிவிட்ட இன்று நாம் சுற்றுலா
செல்ல போகிறோம் அதுவும் சுதந்திரமாக. புத்தகம் என்பது ஒரு கால இயந்திரம் என்று எனது
கட்டுரை தொகுப்பில் முன்பே குறிப்பிட்டுள்ளேன். இன்று அந்த புத்தகத்தின் வழியே நாம்
பயணிக்க போகிறோம்.
திருவாரூர் டூ திருவாரூர் என்ற புத்தகத்தைப்
பற்றி தான் இத்தனை பேச்சும். எனது பிறந்த ஊர் என்பதலா என்று தெரியவில்லை அந்த புத்தகத்தின்
தலைப்பை பார்த்தவுடன் ஆவலுடன் படிக்க துவங்கினேன். அட்டைப்படத்தில் காண்பது போல தொடர்வண்டி
நிலையத்தில் தான் இப் பயணம் (புத்தகம்) துவங்குகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி நண்பர்களோடு
இணைந்து அரட்டை அடித்துக் கொண்டு, சட்டென்று மாறுது வானிலை என்பது போல ஆசிரியர் இரா.அபர்ணா சன்னல்
தொலைகாட்சியில் நடக்கும் நிகழ்வுகளை மட்டைப்பந்து விமர்சகர் போன்று உடனுக்குடன் தெரிவித்தது
மிக அருமை.
முதல் முறையாக செல்பிக்கு “தாமி” என்ற
சொல்லைக் இப்புத்தகத்தின் வழியே அறிந்தேன். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள்
இணைந்து செல்கின்ற சுற்றுலா பயணம் என்பதால் அவர்கள் பெற்றோர்கள் வழங்கிய உணவையும்,
இனிப்பு கார வகைகளையும் ஆசிரியரின் உதவியால் நானும் சுவைத்தேன்.
இந்த புத்தகத்தின் பத்து நாள் பயணத்தில்
நம்மையும் சேர்த்து பயணிக்க அத்தனை நிகழ்வுகளையும் தொகுத்த முறை அருமை. ஒரு நாள் பயணத்தில்
அரசர்களின் வரலாறுகளை கூறுகையில் வியாபாரிகள் மன்னரை விட செல்வ செழிப்பாக இருந்தார்கள்.
அவர்கள் உதவியாலே அரசு செயல்பட்டது அதற்கு மாறாக வியபாரிகளின் சில கோரிக்கைகளை அரசு
நிறைவேற்றியது என்று கூறுகையில். “இப்போ அப்போ எல்லாம் ஒரே மாதிரிதான். இப்போ இருக்க
அரசியல் நமக்கு எதுக்கு.” என கூறுகையில் நகைச்சுவையோடு வரலாற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படி பல பல நுட்பமான தகவல்கள் நிறைந்தது இந்த புத்தகம்.
இது
சாதாரண பயணமாக இல்லாமல் ஒரு வரலாற்றையும், புவியியல் சார்ந்த பல தகவல்கள் நிறைந்ததாகவும்
உள்ளது குறிப்பாக பாலைவனத்தில் நீர் வளம் குறைவாக
இருக்க காரணத்தை எளிமையாக “வரவுக்கு மிஞ்சிய செலவு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பற்றி தெரிந்துக் கொள்ள இந்த புத்தகத்தை படித்துப் பாருங்கள். புவியியல் பட்டதாரியான
ஆசிரியர் என்பதாலும் அந்த வீரியம் சற்று அதிகமாக காணப்படுகிறது. மொத்ததில் மூன்று மணி நேரத்தில் பத்து நாள் பயணித்து விடலாம். நானும்
கூண்டுக் கிளியானதால் முதலில் முன்பே துவங்கிய பயணம் நேற்று தான் முடிந்தது.
இன்னும்
பல படைப்புகளை சிறப்புர படைக்க ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.
இப்படிக்கு
அன்பு சகோதரன்
பிரதாப் மோகன்
அருமையான விமர்சனம் ❤❤❤
ReplyDelete🙌💕
Deleteஅண்ணா... எதிர் பாக்கவே இல்ல ரொம்ப மகிழ்ச்சி அண்ணா.
ReplyDeleteஎனக்கும் மகிழ்ச்சி இப்புத்தகத்தை படிக்கையில்.
Deleteவிமர்சனங்களே சில புத்தகங்களை படிக்க தூண்டுகிறது..!
ReplyDelete🙏✌
ReplyDelete