Inventor Pradhap

ஆதியும் அந்தமும் என் தமிழே🙏

Post Page Advertisement [Top]

அடையாளம்

அடையாளம்

Tamizh nam Adaiyaalam



சில நாட்களுக்கு முன் நான் சந்தித்த சிறிய நிகழ்வை உங்களோடு பகிர விழைகிறேன்.
வழக்கமாக நான் வேலை செய்யும் இடத்திற்கு ஒரு சிறுவன் வருவதுண்டு, அவனிடம் அவ்வப்போது உரையாடுவதும் உண்டு. அவனது வயது 10 இருக்கும் அதாவது 5ம் வகுப்பு படிக்கும் மாணவன். இயந்திரம், வாகனம் மீது அளாது பற்றுக் கொண்டவன் அதனால் எனக்கும் அவனை மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வாகனம் பற்றி என்னிடம் கூறுவான். நானும் அவனிடம் பொறுமையோடும் புன் சிரிப்போடும் கேட்டு தெரிந்துக் கொள்வேன். இப்படியே சில நாட்கள் கழிந்தது பின் ஒரு நாள்…
நான் தனியாக வேலை செய்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது அவன் பள்ளி முடிந்த நிலையில் என் அருகே வந்து பேசிக் கொண்டிருந்தான். அதுவரை அவனிடம் ஏதும் வேலை சொன்னது இல்லை நான் வாகனத்தின் கீழே இருந்ததால் 20ம் நம்பர் ஸ்பானர் எடுத்து வா என்றேன். அவன் “இங்லீஷ்” ல சொல்லுங்க தமிழ்ல நம்பர் தெரியாது என்றான்.  மறுபடியும் 20 என ஆங்கிலத்தில் சொன்ன பின்பு எடுத்து வந்தான். தமிழில் முதலில் 1,2,3 கற்றுக்கொள் என்ற பின் உனக்கு தமிழில் 1,2,3 எத்தனை வரை தெரியும் என்றேன் ? அதற்க்கு அவன்….
எனக்கு 10 வரை தான் தெரியும் என்றான் பள்ளியில் சொல்லிதரவில்லையா என்றேன்.. இல்லை என்றான். உன்மையில் வருத்தப்பட்டேன் அன்று. ஆங்கிலத்தில் அளக்க முடியாத அளவீடுகளில் அன்றே தமிழன் அளந்தான். 

ஆனால் இன்று தமிழ் எண்ணிக்கை கூட தெரியாமால் இருக்கும் நிலையில் வருங்கால தமிழினம் இருப்பதை நினைத்தால் சற்று அச்சமாக உள்ளது, ஏனென்றால் எந்த ஒரு கலையோ கல்வியோ அடிப்படையில் கற்றால் மட்டுமே அதன் பலன் முற்றிலும் கிட்டும். அதாவது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது உன்மையே.
இதற்கு அவனது பள்ளி மட்டும் காரணமல்ல அவனது பெற்றோரும் தான். உலகின் மூத்த மொழி, உயர்தனிச் செம்மொழி என பல சிறப்பு வாய்ந்த இம்மொழியின் அருமை அறிந்த எத்தனையோ அயல் நாட்டவர்கள் நம் தமிழை கற்க ஆவலோடு இருக்கின்றனர், அதுமட்டுமல்லாமல் நம் கலாச்சாரத்தை பின்பற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் இங்கு பிறந்த நம்மில் சிலர் இதனை உணர கூட தயாராக இல்லை.
“வேறு தேசம் பறந்து
தன் அடையாளம் துறந்து
தன் இனத்தை மறந்து
அகதியாய் இறந்து” செல்பவன் தமிழனன்று.
எங்கு சென்றாலும் தனக்கென ஒரு அடையாளம் அந்த இடத்தில் நிறுவி.
பாரெங்கும் தமிழின் புகழும் தமிழனின் புகழும் பரவ செய்பவனே தமிழன்.

இதை படிக்கும் ஒவ்வொரு தமிழனும் தமிழை பற்றி ஒரு நிமிடமாவது தங்களது குழந்தையிடம் பேசுங்கள்.
தமிழ் அவமானம் அல்ல.
நம் அடையாளம்.


                                                                        -பிரதாப் மோகன்

2 comments:

  1. தமிழ் வேண்டும்... உண்மை தான் தமிழா...

    ReplyDelete
  2. தமிழ் வேண்டும்... உண்மை தான் தமிழா...

    ReplyDelete

Bottom Ad [Post Page]